உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குறைந்தது பதனீர் உற்பத்தி உயர்ந்தது கருப்பட்டி விலை

குறைந்தது பதனீர் உற்பத்தி உயர்ந்தது கருப்பட்டி விலை

ஸ்ரீவில்லிபுத்தூர்:பதனீர் உற்பத்தி குறைந்ததால் கருப்பட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை,மம்சாபுரம் பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பனை மரங்கள் உள்ளன. கடந்த ஜனவரியில் பதனீர் சீசன் துவங்கிய நிலையில், ஓரளவு மழை பெய்ததால் பதனீர் உற்பத்தியும் அதிகரித்தது. அதிக அளவு பதனீர் உற்பத்தியால் ,பதனீரை முழுமையாக விற்பனை செய்ய முடியாமல், விவசாயிகள் அதை கருப்பட்டியாக காய்ச்சி விற்பனை செய்து வந்தனர். கருப்பட்டியும் அதிகளவு உற்பத்தியானதால் இதற்கு போதிய விலை கிடைக்க வில்லை. ஒரு கிலோ கருப்பட்டி 50 ரூபாய்க்கு விலை போனதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதனிடையே, தற்போது பதனீர் உற்பத்தி மிகவும் குறைந்ததால், கருப்பட்டி உற்பத்தியும் குறைந்து, இதன் விலையும் அதிகரித்துள்ளது. பனை தொழிலாளி மாரி கூறுகையில்,'' கடந்த வாரம் வரை கிலோ கருப்பட்டிக்கு 50 முதல் 55 ரூபாய் வரை கிடைத்தது. தற்போது கிலோ 67 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை கிடைக்கிறது. வரும் மாதங்கள் பண்டிகை காலங்களாக இருப்பதால், கருப்பட்டியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ