உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இருக்கன்குடி மாரியம்மன் கோயில் விழா துவங்கியது

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் விழா துவங்கியது

சாத்தூர்:சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றுடன் துவங்கியது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது இருக்கன்குடி.இங்குள்ள மாரியம்மன் கோயிலில் நேற்று காலை துவங்கிய ஆடி பெருந்திருவிழாவை யொட்டி, கோயில் அலுவலகத்தில் இருந்து கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, காசி விஸ்வநாதபட்டர், முத்துகுமாரபட்டர்களால் கொடி மரத்தில் கொடி ஏற்ற, தீபாராதனை , சிறப்பு பூஜைகள் நடந்தன. அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி , உதவி ஆணையர் மாரிமுத்து உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று ஆடி வெள்ளி என்பதால் பக்தர்கள் பலரும் பாதயாத்திரையாக நேற்று முன்தினமே கோயில் வந்திருந்தனர். கொடியேற்றம் நடந்து முடிந்த சிறிது நேரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோயில் வந்து அம்மனை தரிசனம் செய்தார். 13 ம் தேதி முடிய ஒன்பது நாள் நடக்கும் விழாவின் போது தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும் நடக்கின்றன. மேலும் தினமும் பக்தர்கள் காவடி, அக்னிசட்டி ஏந்தி வருதல், கயிறு சுற்றுதல் என தங்கள் நேர்த்திகடனை செலுத்துகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 12 ம்தேதி அம்மன் வீதி உலா நடக்கிறது. விழாவையொட்டி சாத்தூரிலிருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ