உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மீண்டும் ஆக்கிரமிப்பு கிராம மக்கள் அவதி

மீண்டும் ஆக்கிரமிப்பு கிராம மக்கள் அவதி

காரியாபட்டி : வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி பின்னர் மீண்டும் ஆக்கிரமித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.காரியாபட்டி அரசகுளத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக குரண்டி, திருப்புவனம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல அங்குள்ள வண்டிப்பாதையை பயன்படுத்தி வந்தனர். இதனை தனிநபர் ஆக்கிரமித்தார். மற்ற விவசாய நிலங்களுக்கும், மற்ற ஊர்களுக்கும் செல்ல முடியாமல் 3 கி.மீ., சுற்றி சென்று வந்தனர். பொது மக்கள் ஆர்.டி.ஓ.,வுக்கு புகார் மனு கொடுத்தனர். வருவாய்த்துறையினர் வண்டிப்பாதையை மீட்டு கிராம மக்கள் பயன்பாட்டிற்கு கொடுத்தனர். இந்நிலையில் சில நாட்களில் மீண்டும் வண்டிப்பாதையை அடைத்து வைத்துக் கொண்டு அந்த வழியில் யாரையும் செல்ல விடாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆத்திரமடைந்த மக்கள் காரியாபட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு வண்டிப்பாதையை மீட்க வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். பல நாட்கள் ஆகியும் இதுவரை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். தற்போது விவசாய நேரம் என்பதால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ