| ADDED : செப் 20, 2011 09:34 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகதோப்பு வனப்பகுதியில்
யானைகளால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, அகழி வெட்ட நடவடிக்கை
எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர்
செண்பகதோப்பு வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை இல்லை. இதனால் மான்,
யானை, காட்டெருமை போன்ற விலங்குகள், தண்ணீருக்காக வனங்களை விட்டு வெளியேறி,
தனியார் விளை நிலங்களில் புகுந்து தண்ணீர் தாகத்தை தீர்த்து வருகிறது. தண்ணீர் கிடைக்காவிடில், தண்ணீர் வரும் குழாய்களை உடைத்து, அங்கு நிற்கும்
மா, பலா, எலுமிச்சை மரங்களை சேதப்படுத்துகிறது. விவசாயிகளும்
பாதிக்கின்றனர். இரவு நேரங்களில் யானைகள் விளைநிலங்களுக்கு புகாதவாறு வெடிகளை போடுவதோடு,
வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருக்க, அகழி வெட்ட நடவடிக்கை எடுக்க
வேண்டும்.