உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மகளிர் குழுக்குளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி

மகளிர் குழுக்குளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி

ராஜபாளையம் : மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ராஜபாளையம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், திறன்வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டது.ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டபடி ஏழை சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. அதன் ஒரு பகுதியாக ராஜபாளையம் கால்நடை பல்கலையில் நவீன கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் ஆடு, கோழி உற்பத்தி பெருக்கத்திற்கான பயிற்சிகளையும் செப். வரை அளிக்க உள்ளனர்.ராஜபாளையம் கால்நடை பல்கலையில் நடந்த பயிற்சி துவக்கவிழாவில் நீர்வடிப்பகுதி மேலாண்மை திட்டமேலாளர் செண்பகராஜ் பயிற்சி கையேடு வெளியிட்டார். திட்ட பொருளியலர் கணேசன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். திட்ட வளர்ச்சி அணி உறுப்பினர்கள் விக்ரமசிங், லதா, ஜெயலட்சுமி பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.சுயஉதவிக் குழுவினருக்கு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் முருகன், உதவி பேராசிரியர் செல்வகுமார் பயிற்சி அளித்தனர்.வகுப்பறை பயிற்சியுடன், களப் பயிற்சிகளும் இவர்களுக்கு அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ