உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரூ.3. 50 கோடி நில மோசடி : மூன்று பேர் மீது வழக்கு

ரூ.3. 50 கோடி நில மோசடி : மூன்று பேர் மீது வழக்கு

விருதுநகர் : விருதுநகர் அருகே ரூ.3. 50 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த, மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.விருதுநகர் பைபாஸ் ரோட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் தேவராஜ் மனைவி செல்லபாப்பா. இவருக்கு சொந்தமான ரூ.3. 50 கோடி மதிப்புள்ள 11. 80 ஏக்கர் நிலம் அருப்புக்கோட்டை பை-பாஸ் ரோட்டில் உள்ளது. இதை தேவராஜ் மனைவியின் சகோதரி கணவரான , மதுரை பசும்பொன் நகரை சேர்ந்த ஜெயக்குமார், ரேணுகா, திருமங்கலம் கவிதா ஆகியோர் ,தங்களது பெயரில் போலி ஆவணம் தயாரித்து விற்க முயற்சித்து உள்ளனர். செல்லபாப்பா புகார்படி, மூவர் மீது நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மற்றொரு வழக்கு: அருப்புக்கோட்டை தும்மசின்னம்பட்டியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் தனக்கு சொந்தமான 16.73 சென்ட் நிலத்தை , பல நபர்களுக்கு 15 லட்சம் ரூபாய் மதிப்பில் விற்பனை செய்துள்ளார். இது போல் சென்னை பெருங்குளத்தை சேர்ந்த ராஜமாணிக்கத்திடம், அதே நிலத்தை விற்றுள்ளார். இவரது புகார்படி, நில மோசடி தடுப்பு பிரிவு போலீசார், பாஸ்கரன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை