உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நில விவரங்களை பார்க்கஇணையதள, செயலி வசதி

நில விவரங்களை பார்க்கஇணையதள, செயலி வசதி

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: நில அளவை, பதிவேடுகள் துறை www.tnlandsurvey.tn.gov.inஎன்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது. இதில் பட்டா மாறுதல், தமிழ் நிலம் அலைபேசி செயலி இணைக்கப்பட்டுள்ளது.மக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணையவழி சேவை தமிழ் நிலம் சிட்டிசன் போர்ட்டல் http:tamilnilam.tn.gov.in/citizen/ இணைக்கப்பட்டுள்ளது. பட்டா, சிட்டா பார்வையிட, சரிபார்க்க அரசு புறம்போக்கு நில விவரம், புலப்படம், நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட பதிவிறக்கம், பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறிய எங்கிருந்தும் எந்நேரத்திலும் அறிந்து கொள்ளலாம்.தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள் விவரங்கள் இத்துறையின் முக்கிய அரசாணைகள், சுற்றறிக்கைகள், பரப்பளவு, அளவு மாற்றங்கள் போன்றவை அறியலாம். இணையதளம், தமிழ்நிலம் செயலி மூலம் நில அளவை தொடர்பான விவரங்களை பார்வையிட்டு பயனடையலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ