உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நலத்திட்ட உதவி வழங்கும் விழா

நலத்திட்ட உதவி வழங்கும் விழா

சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலில் அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டம் நடந்தது.முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சி கொடி ஏற்றி, எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மக்களுக்கு இனிப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது,தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அள்ளிக்கொடுக்கும் தலைவர்களாக வாழ்ந்தனர். பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் சபதம் ஏற்போம். அ.தி.மு.க., வை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., செய்த சேவைதான் இன்றும் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார். திருத்தங்கல் கிழக்குப் பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மேற்கு மாவட்ட மருத்துவரணி செயலாளர் விஜய்ஆனந்த், மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற பொருளாளர் கோட்டை பாண்டி, கட்சியினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை