நல உதவி வழங்கல்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை போட்டோ வீடியோ கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பாக மறைந்த சங்க உறுப்பினருக்கு குடும்ப நல உதவி வழங்கப் பட்டது. சங்க உறுப்பினர் அருள்முருகன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததால் அவரது குடும்பத்தாருக்கு நல நிதியாக மாவட்ட சங்கம், கிளை சங்கத்தின் சார்பில், 65 ஆயிரத்து 800 வழங்கப்பட்டது. மாவட்டத் தலைவர் மோகன்ராம், மாவட்ட பொருளாளர் மோகன்ராஜ், கிளை சங்கத் தலைவர் கருப்பசாமி, செயலாளர் அர்ஜுன்ராஜ், பொருளாளர் கோபால் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.--