உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விரைவில் செயல்பாட்டுக்கு வருமா பெருமாள் தேவன்பட்டி ரேஷன் கடை

விரைவில் செயல்பாட்டுக்கு வருமா பெருமாள் தேவன்பட்டி ரேஷன் கடை

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் தேவன்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையை காலதாமதமின்றி செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் குளம் ஊராட்சி பெருமாள் தேவன் பட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொட்டல்பட்டி, பிள்ளையார் குளம், அக்ரஹாரம், கண்ணார்பட்டி, கண்ணார் பட்டி காலனி பகுதிகளைச் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.இதற்காக தற்போது பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. இன்னும் மின் இணைப்பு உட்பட ஒரு சில வேலைகள் முடியாமல் உள்ளது. எனவே, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து காலதாமதமின்றி ரேஷன் கடையை திறக்க வேண்டுமென சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை