உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கடனுக்கு ஜாமின் கொடுத்த பெண் தற்கொலை

கடனுக்கு ஜாமின் கொடுத்த பெண் தற்கொலை

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் கடன் வாங்கியவர்கள் செலுத்ததால் ஜாமின் கொடுத்த வினிதா 29, தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி வேல்முருகன் காலனியை சேர்ந்தவர் லிங்கராஜ்,33, இவருடைய மனைவி வினிதா, 29, இவர் மகளிர் குழுவில் இருந்தார். தன் கணவருக்கு தெரியாமல் தெரிந்தவர்களுக்கு கடன் வாங்கி கொடுத்து ஜாமின் கையெழுத்தும் போட்டுள்ளார். கடன் வாங்கியவர்கள் தலைமறைவு ஆகி விட்டதால். ஜாமின் கையெழுத்து போட்டதால் வினிதாவை பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி செய்தனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். - -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை