உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூவீலரில் துப்பட்டா சிக்கி பெண் பலி

டூவீலரில் துப்பட்டா சிக்கி பெண் பலி

சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே வெம்பக்கோட்டை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் பரமானந்தம், 48. இவரது மனைவி புவனேஸ்வரி, 38. இருவரும் துலுக்கன்குறிச்சியில் உறவினர் வீட்டிற்கு டூவீலரில் சென்றனர். வெம்பக்கோட்டை ஆலங்குளம் ரோட்டில் சென்றபோது புவனேஸ்வரியின் துப்பட்டா காற்றில் பறப்பதை தடுக்க கழுத்தை சுற்றி தொங்கவிட்டுள்ளார். அப்போது துப்பட்டா டூவீலரின் பின் சக்கரத்தில் திடீரென சிக்கிக் கொண்டது. இதனால் நிலை தடுமாறிய இருவரும் கீழே விழுந்தனர். துப்பட்டா கழுத்தை இறுக்கியதால் புவனேஸ்வரி மயக்கமடைந்தார். சிவகாசி அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி