உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ரூ.1.65 கோடிக்கு தாதம்பட்டி ரோடு அகலப்படுத்தும் பணி தீவிரம்

 ரூ.1.65 கோடிக்கு தாதம்பட்டி ரோடு அகலப்படுத்தும் பணி தீவிரம்

விருதுநகர்: விருதுநகரில் ரூ.1.65 கோடிக்கு தாதம்பட்டி ரோடு அகலப்படுத்தும் துவங்கி உள்ள நிலையில் அதற்கான ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நேற்று நடந்தது. மாநில நெடுஞ்சாலைத்துறையின் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2025--26 நிதியாண்டில் ரூ.1.65 கோடிக்கு மதுரை - கன்னியாகுமரி ரோட்டின் சூலக்கரை மேடு சர்வீஸ் ரோட்டின் துவக்கம்முதல் தாதம்பட்டி ரோடு வரை 2 கி.மீ., 200 மீட்டருக்கு ரோட்டை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக ரோட்டின் இடதுபுறம் பெயர்த்து எடுக்கப்பட்டு அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரோட்டில் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளை அகற்றுவதற்கு தாசில்தார் மூலம் நில அளவீடு செய்த நிலையில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வணிகரீதியான தற்காலிக ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். இப்பணியை விருதுநகர் கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவிக் கோட்டப் பொறியாளர் கணேசன், உதவிப் பொறியாளர் மதிவாணன் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி