உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி பாஸ்போர்ட் மூலம் கொழும்புவில் இருந்து கப்பலில் தூத்துக்குடி வந்தவர் கைது

போலி பாஸ்போர்ட் மூலம் கொழும்புவில் இருந்து கப்பலில் தூத்துக்குடி வந்தவர் கைது

தூத்துக்குடி : போலி பாஸ்போர்ட் மூலம் கொழும்புவிலிருந்து சொகுசு கப்பலில் தூத்துக்குடி வந்த கேரளாவைச் சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். கொழும்புவிலிருந்து சொகுசு கப்பல் 95 பேருடன் நேற்று முன்தினம் காலை தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம் வந்தது. இப்பயணிகளின் பாஸ்போட்டை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சரிபார்த்தனர். இதில் வந்த கேரளா, ஆலப்புழா, குளங்கரையைச் சேர்ந்த ஓமியோபதி பயிற்சி முடித்துள்ள ஹாஜி ஸ்டான்லி(54), பாஸ்போர்ட்டில் சந்தேகம் ஏற்படவே அதுகுறித்து அவரிடம் தனியாக விசாரித்தனர். இதுபற்றி, கேரளாவிலும் கேட்டனர். விசாரணையில், வேறொருவரின் பாஸ்போட்டில் தனது புகைப்படத்தை ஒட்டி மோசடியாக அவர் பயன்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து குடியுரிமைபிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், தெர்மல்நகர் போலீசில் புகார் செய்தார். ஹாஜி ஸ்டான்லியை, போலீசார் கைது செய்தனர். மேல்விசாரணைக்குப்பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

பாஸ்போட் வாங்கியது எப்படி?: ஹாஜி ஸ்டான்லி தனக்கு பாஸ்போட் வாங்கித்தரக்கேட்டு கேரளா பத்தனம்திட்டா, கட்டபுலா 'ராயல் டிராவல்ஸ்' சுசி சகரியா(40)விடம் கேட்டுள்ளார். இதனையடுத்து சுசிசகரியா, 1994ம் ஆண்டில் வேறொருவரின் பாஸ்போட்டில், ஹாஜி ஸ்டான்லி படத்தை ஒட்டி அவரிடம் அதை 1,500 ரூபாய்க்கு விற்றுள்ளார். இதனை பயன்படுத்தி ஹாஜி ஸ்டான்லி பல்வேறு வெளிநாடுகளுக்கும் சென்றுவந்துள்ளார். கடந்த மூன்று மாதத்திற்கு முன் திருவனந்தபுரத்திலிருந்து விமானம் மூலம் கொழும்பு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கப்பலில் தூத்துக்குடி வந்தபோது சிக்கியுள்ளார். அவருக்கு போலி பாஸ்போட் தந்த சுசி சகரியாவை, போலீசார் தேடிவருகின்றனர். அவர் கைது செய்யப்பட்டால் வேறு யாருக்கெல்லாம் இதுபோல போலி பாஸ்போட் தந்துள்ளார் எனத்தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை