| ADDED : செப் 10, 2011 01:17 AM
திண்டுக்கல் :தமிழகத்தில் தரமான கட்டடங்கள் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு கூடுதலாக நான்கு கம்ப்யூட்டர் வழங்கப்பட உள்ளது. ஸ்டேஷன்கள் ஆன்லைன் மூலம் இணைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை உடனுக்குடன் பார்த்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும், ஆன்லைன் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மேலும் திருட்டு, கொள்ளை, கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், தொடர்ந்து மிரட்டும் ரவுடிகளின் பட்டியலும் இதில் வெளியிடப்பட உள்ளது. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஏற்கனவே ஒரு கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக நான்கு கம்ப்யூட்டர் வழங்கப்பட உள்ளது. கம்ப்யூட்டர் வழங்குவதற்கு முன், அந்த போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தின் ஸ்திரதன்மையை ஆய்வு நடத்தி, பின்பு வழங்க வேண்டும் என போலீஸ் உயர் அதிகாரிகள் மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும் கம்ப்யூட்டர் இயக்குவதற்கும், கையாளுவதற்கும், அந்தந்த மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.