உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராகுகாலத்தில் மனு தாக்கல் செய்த தி.மு.க., வேட்பாளர்

ராகுகாலத்தில் மனு தாக்கல் செய்த தி.மு.க., வேட்பாளர்

கரூர்: கரூரில் தி.மு.க., வேட்பாளர் ஒருவர் ராகு காலத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கரூரைச் சேர்ந்த மணிராஜ் என்பவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை தனது வேட்புமனுவை ராகு காலத்தில் தாக்கல் செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், தனது திருமணம் கூட ராகு காலத்தில் தான் நடந்ததாகவும், இதுவரை 5 முறை ராகுகாலத்தில் வேட்புமனு தாக்கல் செய்து, தான் தேர்தலில் போட்டியிட்டதாகவும், அவை அனைத்திலும் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்