மேலும் செய்திகள்
மின்சாரம் கொள்முதலில் ஊழல் தி.மு.க., ஸ்டாலின் குற்றச்சாட்டு
46 minutes ago
இந்திய தேர்தலுக்கும், அமெரிக்க தேர்தலுக்கும் இதுதான் வித்தியாசம்
1 hour(s) ago | 5
திருமண தகவல் மையங்களை அரசு கண்காணிக்க வேண்டும்
1 hour(s) ago
புதுடில்லி:வங்கிக் கணக்கில், ஒரு நிதியாண் டில், 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக செய்யப் படும் முதலீடுகள் குறித்து, தகவல் தெரிவிக்கும் படி, வங்கிகளுக்கு, மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த தகவல் களை அளிப்பதற்காக,தனி மின்னணு வசதியும் செய்யப்பட்டுள்ளது.கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், கடந்தாண்டு, நவ., 8ம் தேதி, செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. செல்லாததாக அறிவிக்க ப்பட்ட, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டது.அதைத் தொடர்ந்து, கறுப்புப் பணத்தை ஒழிக் கும் நடவடிக்கைகளின் மற்றொரு நடவடிக்கை யாக, ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என, மத்திய அரசு தீவிர பிரசாரம் செய்து வருகிறது. 'டிஜிட்டல்' பரிவர்த்தனை களில் ஈடுபடு வோருக்கு பரிசு வழங்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.வங்கிகளில், 'டிபாசிட்' செய்யப்பட்ட பணம் தொடர்பான விபரங்களை, வருமான வரித் துறை உள்ளிட்ட, நிதி புலனாய்வு அமைப்புகள் ஆய்வு செய்து வருகின்றன. மேலும் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை உயர்த்தவும், வரி ஏய்ப்பை
தடுக்கவும், வருமான வரித் துறை பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது.இந்த
நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம், அனைத்து வங்கிகளுக்கும், ஜன.,
17ல் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, எந்தெந்த வகையான டிபாசிட்கள்
குறித்த தகவல்களை அளிக்க வேண்டும்என்ற மிக நீண்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.அதில், ஒரு நிதியாண்டில், 10 லட்சம் ரூபாய்க்கு கூடுதலாக, 'டிபாசிட்' செய்யப்பட்டால், அது குறித்த தகவல்களை வங்கிகள் தெரிவிக்க வேண்டுமென, உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவால், கறுப்புப் பண முதலைகள் பலர் சிக்குவர் என, நிதித் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தெரிவிக்க வேண்டிய விஷயங்கள்
வங்கிகளுக்கு, மத்திய நேரடி வரிகள் வாரியம் அனுப்பியுள்ள, உத்தரவு கடித விபரம்:* எந்த ஒரு வங்கிக் கணக்கிலும், ஒரு நிதியாண்டில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்யப்பட்டால், அது குறித்து தெரிவிக்க வேண்டும்* கிரெடிட் கார்டு பில்லை செலுத்தும்போது, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக செலுத்தினால், அதை தெரிவிக்க வேண்டும்* செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியான பிறகு, பழைய, செல்லாத நோட்டுகளை மாற்றிக் கொள்ள அளிக்கப்பட்ட, 50 நாள்அவகாச காலத்தில், ஒருவர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடப்பு கணக்குகளில், ஒட்டுமொத்தமாக, 12.50 லட்சம் ரூபாய்க்கு மேல், 'டிபாசிட்' செய்திருந்தால் அதை தெரிவிக்க வேண்டும்* அதே நேரத்தில், நடப்பு கணக்கு அல்லாத மற்ற கணக்குகளில், 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் செய்யப்பட்ட, 'டிபாசிட்' குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும்* கடந்த, 2016, ஏப்., 1 முதல், நவ., 9 வரையிலான காலத்தில், எந்தக் கணக்கிலும் செய்யப்பட்ட அதிக அளவிலான, 'டிபாசிட்'கள் குறித்து, இம்மாதம், 31க்குள் தெரிவிக்க வேண்டும்* ஒரு நிதியாண்டில், செக், மின்னணு முறை என, எந்த முறையிலும், 10 லட்சம் ரூபாய்க்கு மேல், கிரெடிட் கார்டு பில்லை செலுத்தியிருந்தால், அதன் விபரங்கள் தரப்பட வேண்டும்* ஒரு ஆண்டில், 10 லட்சம் ரூபாய்க்கு மேலாக, பாண்டுகள், மியூச்சுவல் பண்ட் அல்லது பங்குகள் விற்பனை மூலம் கிடைத்தாலும், அந்த வங்கிக் கணக்கு குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும்* 10 லட்சம் ரூபாய்க்கு மேல், வெளிநாட்டு கரன்சி, டிராவலர்ஸ் செக் வாங்கியிருந்தால், அந்த கணக்கு குறித்து தெரிவிக்க வேண்டும்* வீடு உள்ளிட்ட அசையா சொத்துகள், விற்பனை அல்லது வாங்குவது, 30 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால், அந்த கணக்கு குறித்து தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
46 minutes ago
1 hour(s) ago | 5
1 hour(s) ago