உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வகுப்பறைகளை கழுவிய பள்ளி சிறுவர், சிறுமிகள்

வகுப்பறைகளை கழுவிய பள்ளி சிறுவர், சிறுமிகள்

ஆண்டிபட்டி:தேனி மாவட்டம், வைகை அணையில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர்கள் நேற்று மதியம் வளாகப்பகுதியை சுத்தம் செய்தனர். சில சிறுமிகள் அருகில் உள்ள குழாயில் குடங்களில் தண்ணீர் பிடித்து வந்து வகுப்பறைகள் மற்றும் பள்ளி முன்பகுதிகளை சுத்தம் செய்தனர்.சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்ய ஆசிரியர்கள் கூறியதாக இவர்களில் சிலர் தெரிவித்தனர்.ஒழுக்கம், சுத்தம் ஆகியவற்றை மாணவர்கள் பள்ளிகளில் கற்றுக்கொள்ள வேண்டியதுதான். அதற்காக துப்புரவு பணிகளை தொடர்ந்தால் படிப்பு பாதிப்படையும் தானே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை