உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அடுத்தவர் மனைவியை கடத்தியவர் கைது

அடுத்தவர் மனைவியை கடத்தியவர் கைது

கரூர்: கரூரில் அடுத்தவர் மனைவியை கடத்தியவர் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த தோகமலை அருகேயுள்ள சின்னகவுண்டபட்டியை சேர்ந்தவர் சக்திவேல்(32). இவரது மனைவி சாந்தி(28). இவருக்கும் கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்திக்கும் இடையே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி முதல் ராஜீவ்காந்தியையும், சாந்தியையும் காணவில்லை. இது குறித்து சக்திவேல் தோகமலை போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார் மறைவிடத்தில் பதுங்கியிருந்த இருவரையும் மீட்டு ராஜீவ்காந்தியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை