உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தூக்கு தண்டனை ரத்து:‌‌வைகோ கோரிக்கை

தூக்கு தண்டனை ரத்து:‌‌வைகோ கோரிக்கை

ஆத்தூர்: ‌தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.‌சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடந்த பாரதி இலக்கிய பேரவை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, பேசியதாவது:உலகில் 137 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது.இந்தியாவில் 1937ல் மரண தண்டனையை காந்தி எதிர்த்தார். 1949ல் சட்ட‌மேதை அம்பேத்கர் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்தார்.நான் 1996ல் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் போராடி உள்ளேன்.இந்நிலையில் சேலத்தில் கடைசியாக மரண தண்டனை இடப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பின்னர் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்றார்.இந்த மூவரும் தவறு செய்ய‌வில்லை அவ்வாறு செய்துள்ளதாக ஜோடிக்கப்பட்டிருக்கிறார்கள் எனவே தமிழக அரசு 161 ஆம் பிரிவில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மனு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்