| ADDED : செப் 10, 2011 01:19 AM
சிவகாசி :'' திருச்சி இடைத்தேர்தலை ம.தி.மு.க., புறக்கணிக்கிறது,'' என அக்கட்சி பொதுசெயலாளர் வைகோ கூறினார்.
சிவகாசியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையை தடை செய்ய கோரி, தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் வரலாற்று சிறப்பு மிக்கது. தமிழக அரசின் தீர்மானத்தை மத்திய அரசு கணக்கில் எடுத்து, மூன்று பேரின் தூக்கை ரத்து செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,- தி.மு.க.,வோடு கூட்டணி இல்லை. பொதுதேர்தலை நாங்கள் புறக்கணித்தது போல், திருச்சி இடைத்தேர்தலையும் புறக்கணிக்கிறோம். சில கட்சிகளோடு கூட்டணி பேச்சு வார்த்தை தொடருமா, என்ற யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது ,என்றார்.