மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
2 hour(s) ago | 10
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
9 hour(s) ago | 3
திண்டுக்கல்:புற்று நோயால் இறந்த ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியை உடல், தேனி மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.திண்டுக்கல் சின்னாளபட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த சந்திரமோகன் மனைவி லட்சுமி, 59. இவர் 2006 முதல், வயிற்றில் புற்று நோயால் அவதிப்பட்டார். 'இறந்த பின், உடலை தானமாக அளிக்க வேண்டும்,' என, கணவன், மகன்களிடம் கேட்டு கொண்டார்.நேற்று மாலை 4 மணிக்கு அவர் இறந்தார். அவரது விருப்பப்படி உடலை, தேனி மருத்துவ கல்லூரிக்கு தானமாக அளித்தனர். இதை 'தேக தானம் ' என்று அழைப்பர். கண்தானம், சிறுநீரக தானம் ஆகியவற்றை விட இது சிறப்பானது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேரிடையாக உள்உறுப்புகளை ஆய்ந்து பார்க்க இது உதவிடும்.'பிறருக்கு உதவ வேண்டும் என்ற கருத்தில் உடலை தானமாக அளிக்க கேட்டுக் கொண்டார். மருத்துவ கல்லூரி முதல்வர் வள்ளிநாயகத்திடம் உடலை ஒப்படைத்தோம்', என்றார்.
2 hour(s) ago | 10
8 hour(s) ago | 1
9 hour(s) ago | 3