மேலும் செய்திகள்
எச்.ராஜாவுக்கு பக்கவாத பாதிப்பு: அப்பல்லோ மருத்துவமனை தகவல்
2 hour(s) ago | 2
கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை; சொல்கிறார் ராமதாஸ்
2 hour(s) ago | 4
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தலைவாசல் பகுதியில் கூலிப்படையினர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைவாசல் அடுத்த ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சாராய வியாபாரி வெங்கடாசலம். இவர் தனது எதிரிகளை கொல்வதற்காக உறவினர் வினோத் குமாரின் உதவியுடன் கூலிப்படைக்கு ஏற்பாடு செய்தார். இவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் டாடா விக்டா காரில் வந்திருந்தனர். நீண்ட நேரமாக இந்த கார் நின்றதையடுத்து அப்பகுதி மக்களுக்கு சந்தேகள் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ பகுதிக்கு போலீசார் விரைந்தனர். கார் மற்றும் அதிலிருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் கூலிப்படையினர் சென்னை மேடவாக்கத்தைச் சேர்நதவர்கள் எனவும், இவர்கள் இந்த காரை டிராவல்ஸ் நிறுவனத்திடமிருந்து கடத்தி வந்துள்ளனர். காரின் நம்பரை மாற்றி அமைத்துள்ளனர். இதனையடுத்து சென்னை போலீசார், சேலம் போலீசாருடன் இணைந்து விசாரணையை விரைவில் துவக்க உள்ளனர்.
2 hour(s) ago | 2
2 hour(s) ago | 4