மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
15 hour(s) ago
மதுரை:'' உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கட்சியினரிடம் இருந்து, நினைத்ததற்கு மாறாக மனுக்கள் குவிகின்றன,'' என, மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.மதுரையில், மேயர் வேட்பாளர் பாக்யநாதன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் நேற்று அவரை சந்தித்தனர். பின்னர் நிருபர்களிடம் அழகிரி கூறியதாவது:சட்டசபை தேர்தலில் வெற்றியை இழந்தாலும், உள்ளாட்சித் தேர்தலில் கட்சியினரிடம் இருந்து போட்டியிடுவதற்கான மனுக்கள், நாங்கள் நினைத்ததற்கு மாறாக குவிந்துள்ளன.
ஆட்சி மாற்றத்திற்கு முன், மதுரையில் முழங்கிய ஜெயலலிதா, தி.மு.க.,வினர் பெயர்களை குறிப்பிட்டு பழிவாங்குவேன், என்றார். ஆட்சி மாற்றத்திற்கு பின், அவர்களை சிறையில் அடைத்தார். சிலரை வேண்டுமென்றே குண்டர் சட்டத்தில் கைது செய்தார்.இது அவரது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், பழிவாங்குவதில் குறியாக இருக்கிறார். இதை மக்கள் புரிந்துக் கொண்டு, 'தவறு செய்து விட்டோம்' என எண்ணி, தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுவர். ஆறு மாத காலத்தில் அ.தி.மு.க.,வின் கூட்டணி கட்சிகளுக்கு எந்த அளவுக்கு ஜெ., மரியாதை கொடுத்துள்ளார் என, மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.இவ்வாறு அழகிரி கூறினார்.
4 hour(s) ago | 3
14 hour(s) ago | 1
15 hour(s) ago