மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 2
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
13 hour(s) ago
அயல்நாட்டவரால் சிறைபிடிக்கப்படும் மீனவர் குடும்பங்களுக்கு, தாயகம் திரும்பும் வரை வழங்கப்படும் தின உதவித் தொகையை, 50 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.கடலில் மீன்பிடிக்கும் போது புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் கடலில் திசைமாறி, சர்வதேச கடல் எல்லையைக் கடந்து, அண்டை நாட்டு கடல் எல்லைக்குள் சென்றுவிடுவதால், அவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகின்றனர்.அவ்வாறு சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு உதவும் வகையில், கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாளில் இருந்து, அண்டை நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் வரை, நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.இதற்காக, கடலோர மாவட்டங்கள் ஒவ்வொன்றுக்கும், தலா ஐந்து லட்ச ரூபாய் வீதம் ஒன்பது மாவட்டங்களுக்கு 40 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு வந்தது. இந்த தொகையை, மீனவர்களது குடும்பத்தினரின் அன்றாட வாழ்க்கைக்கு உதவாது என்றும், இதை 250 ரூபாயாக உயர்த்தித் தர வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.அதை ஏற்று, மீனவர்களின் குடும்பத்தினருக்கு நாள் ஒன்றுக்கு, 250 ரூபாயாக உயர்த்தி வழங்கவும், இதற்காக 12 மாவட்ட கலெக்டர்களுக்கும் தலா 6 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.நமது சிறப்பு நிருபர்-
1 hour(s) ago | 2
12 hour(s) ago | 1
13 hour(s) ago