உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணம் கட்டியும் கிடைக்கலே ரேஷன் கார்டு நகல்

பணம் கட்டியும் கிடைக்கலே ரேஷன் கார்டு நகல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ரேஷன் கார்டு அச்சிடும் இயந்திரங்கள் சரிவர இயங்காததால், பணம் செலுத்தியும் நகல் கார்டு அனுப்புவதில், அதிகாரிகள் தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.ரேஷன் கார்டு தொலைத் தவர்கள், கார்டில் உறுப்பினர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் என திருத்தம் செய்தவர்களுக்கும் நகல் கார்டு வழங்கப்படுகிறது.இதற்கு, பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கார்டு கட்டணமாக 20 ரூபாயும், அஞ்சல் கட்டணமாக 30 ரூபாயும் வசூலிக்கப்படுகின்றன.பலரும் நகல் கார்டுக்கு விண்ணப்பித்து உள்ளனர்; ஆனால், அதை விண்ணப்பதாரர் வீடுகளுக்கு அனுப்பும் பணியில் தாமதம் ஏற்படுகிறது.இது குறித்து, உணவு வழங்கல் துறை பணியாளர்களிடம் கேட்டபோது, 'பல அலுவலகங்களில் கார்டு அச்சிடும் இயந்திரம் சரிவர இயங்குவதில்லை. இதை சரி செய்து தருமாறு, உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் தான் தாமதம் ஏற்படுகிறது' என்றனர்.எனவே, இயந்திரம் சரியானால் தான், கார்டு கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Gobinathan
ஜூலை 19, 2024 23:59

ரேஷன் கார்டுக்கு நகல் பணம் கட்டி சுமார் ஒரு மாதமாகியும் இன்னும் காரடு கிடைக்கவில்லை


Revathi Revathi
ஜூலை 19, 2024 20:12

எப்பதான் வரும் என்று தெரியவில்லை


Adwik Yuvan
ஜூலை 19, 2024 11:26

ரேஷன் கார்டு அப்பளய் பண்னி 7 மாதங்கள் ஆகியும் இன்னும் கிடைக்கல


Partha Sarathi
ஜூலை 18, 2024 21:13

நான் புதிய குடும்ப அட்டைக்காக பதிந்து உள்ளேன்


Kanns
ஜூலை 18, 2024 09:45

Shame. Govt MUST be Heavily Penalised for Denying Basic Services to Citizens but Provided to All Aadhar Holding Foreign Infiltrators


SATHISHKUMAR
ஜூலை 18, 2024 09:10

வணக்கம் நான் பதிவு செய்து ஏழு மாதம் ஆகிவிட்டது என்னக்கு வரவில்லை


Kasimani Baskaran
ஜூலை 18, 2024 05:15

இப்பொழுது இருக்கும் நிதிநிலையில் ஏதாவது கட்டணத்தை உயர்த்தித்தான் பழுதான இயந்திரத்தை சரி செய்ய முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை