உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் வெட்டிக்கொலை

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் வெட்டிக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் -ஐ கொலை செய்த கொலையாளிகள் 8 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.சென்னை பெரம்பூரில் இவரது வீடு உள்ளது. இன்று இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்மநபர்கள் ஆம்ஸ்டிராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். உணவு டெலிவரி செய்வது போல் வந்து இச்சம்பவத்தை அரகேற்றியதாக தெரியவந்துள்ளது. பலத்த காயமடைந்த ஆம்ஸ்டிராங்க், சென்னை கிரீன்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.ஆம்ஸ்ட்ராங் படுகொலையை அடுத்து அசம்பாவிதங்களை தடுக்க சென்னை பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் கொலையாளிகளை கைது செய்யுமாறு போராட்டம் நடத்தினர்.

இபிஎஸ் கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரையே கொலை செய்யும் நிலை தமிழகத்தில் உள்ளது. கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யப்படவேண்டும். திமுக ஆட்சியில் சட்டம் ஓழுங்கை என்னவென்று சொல்வது. என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி.

கொலையாளிகள் சரண்

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் -ஐ கொலை செய்த கொலையாளிகள் 8 பேர் போலீசில் சரண் அடைந்தனர். கொலையாளிகள் 8 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது என சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

தமிழ்வேள்
ஜூலை 06, 2024 09:55

.ஒரு மணிமண்டபம் கட்டீருவோம்.. எல்லா புள்ளைகளும் கொலையை மறந்து குவார்ட்டர் அடிச்சுட்டு நமக்கே ஓட்டு போட்டுருவார்


சாம்
ஜூலை 06, 2024 06:10

டேய் என்னடா நடக்குது தமிழ் நாட்டுல...


samvijayv
ஜூலை 06, 2024 00:55

அதாவது... கடந்த ஒரு சில மதங்களாகவே தமிழ்நாட்டிற்கு நேரம் சற்று சரியில்லை என்று தான் கூற வேண்டும்... கள்ளச்சராயம் 21 2023ல், சர்வதேச போதை ஆசாமி கைது, வட சென்னை மழையில் வெள்ளத்தில் சரியான நேரத்தில் மருத்துவ கிடைக்காமல் போனது ஒரு கர்பணி பெண் மரணம், தூத்துக்குடி மழை வெள்ளம், அதிலும் 40க்கு /40 வெற்றி பெற்ற உடனே கள்ளக்குறுச்சியில் கள்ளச்விஷம்சரயம்அருந்தி 63 அப்பாவி அன்றாட கூலி தொழிலாளர்கள் மரணம் தற்பொழுது வட சென்னையில் ஒரு மாநில தலைவர் வெட்டி கொலை எனவேன்று இதை கூறுவது?.


samvijayv
ஜூலை 06, 2024 00:55

அதாவது... கடந்த ஒரு சில மதங்களாகவே தமிழ்நாட்டிற்கு நேரம் சற்று சரியில்லை என்று தான் கூற வேண்டும்... கள்ளச்சராயம் 21 2023ல், சர்வதேச போதை ஆசாமி கைது, வட சென்னை மழையில் வெள்ளத்தில் சரியான நேரத்தில் மருத்துவ கிடைக்காமல் போனது ஒரு கர்பணி பெண் மரணம், தூத்துக்குடி மழை வெள்ளம், அதிலும் 40க்கு /40 வெற்றி பெற்ற உடனே கள்ளக்குறுச்சியில் கள்ளச்விஷம்சரயம்அருந்தி 63 அப்பாவி அன்றாட கூலி தொழிலாளர்கள் மரணம் தற்பொழுது வட சென்னையில் ஒரு மாநில தலைவர் வெட்டி கொலை எனவேன்று இதை கூறுவது?.


Priyan Vadanad
ஜூலை 05, 2024 23:16

முதல்வர் நிர்வாகம் சரியில்லை./// கள்ள சாராய சாவுக்கு கொடுத்ததுபோல இதற்கு எத்தனை லட்சம் கொடுத்து அமுக்கப் பார்ப்பாரோ தெரியவில்லை./// இப்படி கொலைகள் நம் விழுந்தால்தான் முதல்வருக்கு உறைக்குமோ தெரியவில்லை.///


தமிழ்வேள்
ஜூலை 06, 2024 09:37

உங்கள் திருச்சபையின் புரவலரை குறை சொன்னால் உங்களுக்கு அப்பம் திராட்சை ரசம் கிடையாது...


naranam
ஜூலை 05, 2024 23:06

கொலை நாடு


Prasath Ram
ஜூலை 05, 2024 22:45

அண்ணாமலை அன்னான் நீட் டு சார்ஜ் தமிழ்நாடு சிஎப் மினிஸ்டர்


தமிழ்நாட்டுபற்றாளன்
ஜூலை 06, 2024 05:35

கவுன்சிலர் க்கு வாய்ப்பு இல்லாதவர் முதல்வர் , ஹத்ராஸ் 166 சாவு அதெற்கெல்லாம் வாய்ப்பு நோ


Anantharaman Srinivasan
ஜூலை 05, 2024 22:30

எடுத்தற்கெல்லாம் கொலை என்பது சர்வசாதாரணமாகி விட்டது. காரணம் தெரியாமல் திராவிட விடியலை குறை சொல்லக்கூடாது.


Rama
ஜூலை 06, 2024 01:22

ஏன் சர்வசாதாராணமாக ஆனது? ஏன் காவல் துறை கண்டு பயமில்லாமல் போனது. ஆராயப்பட வேண்டும்


Venkateswaran Ramamoorthy
ஜூலை 05, 2024 22:19

எந்த கொறையும் சொல்ல முடியாத ஆட்சியாக்கும் ?


வாய்மையே வெல்லும்
ஜூலை 05, 2024 21:55

இன்றைய அபாய நிலை.. மனிதனின் உயிர் கிலோ என்ன விலை ? மனிதநேயம் சுடுகாட்டில் புதைக்கப்பட்டுள்ளது இந்த அரசாங்கத்தில்.அடாவடி ஆட்சி சந்திசிரிக்குது வெட்கக்கேடு


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை