உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லைக் அண்ட் ஷேர் எனரூ.15.49 லட்சம் மோசடி

லைக் அண்ட் ஷேர் எனரூ.15.49 லட்சம் மோசடி

கோவை:குறும்படங்களை 'லைக், ஷேர்' செய்தால் பணம் தருவதாக முதியவரிடம் 15.49 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை மாவட்டம் பீளமேடு லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் 64, சொந்தமாக தொழில் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் இவரது மொபைல் போன் எண்ணுக்கு 'மெசேஜ்' ஒன்று வந்தது. அதில் ஆன்லைனில் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு கருத்துக்களை பதிவிட்டு லைக், ஷேர் செய்தால் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை நம்பி தாமோதரன் மர்ம நபர் மெசேஜில் தெரிவித்திருந்த வங்கி கணக்கில் சிறிய அளவு முதலீடு செய்தார். அவருக்கு உடனடியாக கூடுதல் லாபம் கிடைத்தது. இதை தொடர்ந்து தாமோதரன் பல்வேறு தவணைகளாக 15.49 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். அதன் பின் அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. முதலீடு செய்த தொகையையும் திரும்ப பெற முடியவில்லை. ஏமாற்றப்பட்டது உணர்ந்த தாமோதரன் போலீசில் புகார் அளித்தார். கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி