உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.2 கோடியில் பெருந்திட்டம்

சுற்றுலா தலங்களை மேம்படுத்த ரூ.2 கோடியில் பெருந்திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்புகள்:திண்டுக்கல் புல்லாவெளி அருவி, கொட்டுவரை அருவி, கோட்டை நங்காஞ்சியாறு அணைப் பகுதி, மதுரை மாவட்டம் குட்லாடம்பட்டி அருவி, திருச்சி புளியஞ்சோலை அருவி ஆகிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த, 10.20 கோடி ரூபாயில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்ராமநாதபுரம் தொண்டி கடற்கரை, கன்னியாகுமரி சங்குதுறை, சொத்தவிளை கடற்கரை பகுதி, சூரிய காட்சி முனை; துாத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கடற்கரை பகுதிகளில், 6.50 கோடி ரூபாயில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி ஏரிப்பகுதி மேம்பாடு, திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலையில் உள்ள புங்கனுார் ஏரி, திருவண்ணாமலை மாவட்டம், தாமரைக்குளம் ஏரியில், படகு குழாம் மற்றும் இதர சுற்றுலாப் பயணியர், 5.70 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்பல்வேறு சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் விதமாக, 2 கோடி ரூபாயில் பெருந்திட்டம் தயாரிக்கப்படும்கோவையில் மருத்துவ சுற்றுலா மாநாடு, 1 கோடி ரூபாயில் நடத்தப்படும்தமிழகத்தில் நீர் சாகச விளையாட்டுகளை ஊக்குவிக்கும் பணிகளுக்கு, 1 கோடி ரூபாய் செலவிடப்படும்தஞ்சாவூர் மாவட்டம், புதுப்பட்டினம் கடற்கரை, சென்னை அருகில் உள்ள பழவேற்காடு ஏரிப்பகுதி ஆகியவற்றில், 1 கோடி ரூபாயில் சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்கப்படும்தமிழகத்தில் கிராமிய சுற்றுலா, வான்நோக்கு சுற்றுலா ஆகியவற்றை மேம்படுத்த சாத்தியக்கூறு அறிக்கை, 50 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்படும்ஊட்டி, குன்னுார், கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா தலங்களில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஹோட்டல்களை தரம் உயர்த்தும் பணி, 18.80 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

V RAMASWAMY
ஜூன் 27, 2024 10:47

திட்டங்கள் வகுப்பதே, அவரவர்களுக்கு எவ்வளவு ஆட்டை போடவேண்டுமோ அதற்கு தகுந்தாற்போல் தான்.


Palanisamy Sekar
ஜூன் 27, 2024 05:46

செய்தியை படிக்கும்போதே சிரிப்பை அடக்க முடியவில்லை. சுற்றுலா துறையை மேம்படுத்த வெறும் இரெண்டே கோடியா ? யானைப்பசிக்கு சோளப்பொறி ? விளங்கும் உங்க திட்டம். நேரா பாக்கெட்டுக்குள் தான் போகும்..


Rajamohan.v
ஜூன் 27, 2024 04:49

அடடே. .இவங்க ஆட்டைய போடும் அமௌண்ட்டைவிட திட்ட ஒதுக்கீடு ரொம்ப கம்மியா இருக்கே..


Suresh
ஜூன் 27, 2024 04:12

சுற்றுலா தலங்களில் குறைந்தபட்சம் ஆண் பெண்ணுக்கு தனித்தனியாக நான்கைந்து கழிவறைகளாவது இந்த பணத்தில் கட்டுங்கய்யா ?


கருத்து சுந்தரம்
ஜூன் 27, 2024 03:17

ஓ, இவருதான் இந்தத் துறைக்கு மநதிரியா?!


PalaniKuppuswamy
ஜூன் 27, 2024 03:02

கல்வி துறைக்கு நன்கொடை வாங்குவது எப்படி என்ற கூட்டம் நடத்த 3 கோடி நட்சத்திர விடுதிக்கு செலவு செய்யும் அரசு . 2 கோடியில் பிரமாண்ட திட்டம் எப்படி? . யாரோ ஒருத்தர் முட்டால்


Iniyan
ஜூன் 27, 2024 02:38

அத்தனை கோடிகளையும் திமுக காரர்கள் லபக்கி விடுவார்கள்


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை