உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொழிலதிபர் வீட்டில் ரூ.2 கோடி நகை கொள்ளை

தொழிலதிபர் வீட்டில் ரூ.2 கோடி நகை கொள்ளை

சென்னை: ராஜா அண்ணாமலைபுரம், எம்.ஆர்.சி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன், 40; தொழிலதிபர் மற்றும் பங்குச் சந்தை, வர்த்தகர். இவர் நேற்று முன்தினம், தன் வீட்டிலுள்ள லாக்கரில் இருந்து செலவுக்காக பணம் எடுக்க சென்ற போது, வழக்கமாக வைக்கும் இடத்தில் சாவி இல்லை.தேடிப் பார்த்தும் கிடைக்காததால், 'டெக்னீஷியன்' ஒருவரை அழைத்து, உடைத்து திறந்தார். அப்போது, அதிலிருந்த 250 சவரன் நகை, 10 கிலோ வெள்ளிப் பொருட்கள், 25,000 ரூபாய் என, 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது தெரிந்தது.அதிர்ச்சியடைந்த கோபாலகிருஷ்ணன், பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், சரவணன் என்பவர் கடந்த, 10 ஆண்டுகளாக கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். அவரது நடத்தை சரியில்லாததால், கடந்த 27ம் தேதி வேலையை விட்டு அனுப்பினேன். தற்போது நகை, பணம் திருடப்பட்டுள்ளது.ஓட்டுனரை பிடித்து விசாரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார். புகாரின்படி வழக்குப்பதிவு செய்த பட்டினப்பாக்கம் போலீசார், அசோக் நகரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் சரவணன், 35, என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

கமிஷனர் வசிக்கும் அபார்ட்மென்ட்

கோபாலகிருஷ்ணன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்குள், வெளியாட்கள் யாரும் அவ்வளவு எளிதாக செல்ல முடியாது. அங்கு பாதுகாப்பிற்கு பாதுகாவலர்கள் மட்டுமின்றி, 'பேஸ் டிடெக்டர்'களும் உள்ளன. மேலும், அங்கு வருவோர் யாரை சந்திக்க வருகின்றனர் என்பது குறித்து முழு விபரங்களும் சேகரித்து, சம்பந்தப்பட்டவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அனுமதி பெற்ற பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவர். பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில், வெளியாட்கள் யாரும் திருடியிருக்க வாய்ப்பில்லை என, அங்கு வசிப்போர் கூறுகின்றனர்.இதே குடியிருப்பில் தான் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் வசிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி