உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்களில் ஏசி பெட்டிகள் முன்பதிவு 20% அதிகரிப்பு

ரயில்களில் ஏசி பெட்டிகள் முன்பதிவு 20% அதிகரிப்பு

சென்னை:கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், விரைவு ரயில்களில், 'ஏசி' பெட்டிகளுக்கான முன்பதிவு வழக்கத்தை விட, 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஏப்ரல், மே மாதங்களில், பொதுமக்கள் அதிகளவில் வெளியூர் பயணம் செல்வர். குறிப்பாக, கோடை விடுமுறையில் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா இடங்களுக்கும் செல்வர். எனவே, பயணியரின் தேவைக்கு ஏற்றார் போல, சிறப்பு ரயில்கள் இயக்குவது, விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்குவது போன்ற நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொள்ள உள்ளது.இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:விரைவு ரயில்களில் வழக்கமாக, 'ஏசி' அல்லாத அனைத்து பெட்டிகளுக்குமான முன்பதிவு, இரண்டு மாதங்களுக்கு முன்னரே முடிந்து விடுகிறது. இருப்பினும், 'ஏசி' பெட்டிகளில் கடைசி நேரங்களில் தான் டிக்கெட் விற்றுமுடியும்.கடந்த சில வாரங்களாக, வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கி உள்ளதால், விரைவு ரயில்களின், 'ஏசி' பெட்டிகளில் பயணிக்கவும் டிக்கெட் எடுக்க மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கடந்த இரண்டு வாரங்களாக,'ஏசி' பெட்டிகளில் முன்பதிவு செய்வது வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரித்து உள்ளது.படுக்கை வசதி உடைய முன்பதிவு பெட்டிகளோடு, சற்று கூடுதல் கட்டணம் செலுத்தினால், மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகளில் பயணிக்க முடியும் என்பதால், இந்த பெட்டிகளில் பயணம் செய்ய பயணியர் விரும்புகின்றனர்.பயணியரின் தேவைக்கு ஏற்ப, வாய்ப்புள்ள முக்கிய விரைவு ரயில்களில் கூடுதல், 'ஏசி' பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை