உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.200 கோடியில் 2,500 டிரான்ஸ்பார்மர்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

ரூ.200 கோடியில் 2,500 டிரான்ஸ்பார்மர்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தரமான மின் வினியோகத்திற்காக, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,500 இடங்களில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்படும்,'' என, அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து உள்ளார்.சட்டசபையில் அவரது அறிவிப்புகள்:l தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில், பல்வேறு ஊர்களில் தேரோடும் வீதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள், பூமிக்கடியில் மாற்றி அமைக்கப்படும்l திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகர், திருச்சி தங்க நகர் ஆகிய இடங்களில், 211 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்l சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிப்பதற்காக, 19 பவர் டிடிரான்ஸ்பார்மர்கள், 217 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்l சூரியசக்தி, காற்றாலை உள்ளிட்ட பசுமை மின் ஆதாரங்களை கொண்டு தனியார் வாயிலாக, 2,000 மெகாவாட் பசுமை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்l சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தனி வீடுகள் மற்றும் அடுக்குமாடி வீடுகளில் சூரியசக்தி மேற்கூரை நிறுவு திறனை கண்டறிய, 'சாப்ட்வேர்' உருவாக்கப்படும்l காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தியுடன் இணைந்த மின் உற்பத்தி நிலையங்களுக்கு, புதிய கொள்கை வகுக்கப்படும்l புதிய நீரேற்று மின் நிலைய திட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில், புதிய கொள்கைகள் வகுக்கப்படும்l மின் வாரிய களப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மின் கட்டமைப்புகளில் மின்சாரம் உள்ளதா என்பதை கண்டறியும் எச்சரிக்கை சாதனங்கள், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்l துாத்துக்குடி அனல் மின் நிலைய நான்காவது அலகில் உள்ள கொதிகலன்களில், எட்டு செறிவூட்டப்பட்ட நிலக்கரி எரிப்பான்கள் 65 லட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்படும். சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையம், 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும்l தரமான மின் வினியோகத்திற்காக, 2,500 இடங்களில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Rajesh Prabu.M
ஜூன் 28, 2024 18:09

சார், எங்கள் ஊர் பகவதி மங்கலம், ராமநாத புரம் மாவட்டம்,RS மங்கலம் தாலுகா, எங்கள் ஊரில் இன்று வரை மின்சாரம் சரிவர இல்லை.எத்தனையோ தடவை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தினமலர் நீங்கள் தான் அரசு கவனத்தில் எடுத்து செல்ல வேண்டும். ஊர் மக்கள் சார்பாக வேண்டுகிறேன்.


அப்புசாமி
ஜூன் 27, 2024 16:30

அணில் கடிக்க முடியாத டிராப்ஸ்ஃபார்மர் வாங்குங்க.


S. Neelakanta Pillai
ஜூன் 27, 2024 04:32

9000 எண்ணிக்கையிலான transformer மின்வாரிய பண்டக சாலைகளில் 9000 ட்ரான்ஸபோர்மர் பல வருடங்களாக தூங்கிக் கொண்டு இருக்கிறது. புதிது புதிதாக வாங்கி வாங்கி குவித்து கமிசன் அடித்ததுதான் மிச்சம். யாருக்கும் பொறுப்பும் இல்லை அக்கறையும் இல்லை


Mani . V
ஜூன் 27, 2024 04:08

ஒரு டிரான்ஸ்பார்மர் விலை ஐந்து லட்சம் தானே திமிங்கிலம்? மூன்று லட்சம் வீதம் ஆட்டை என்றால், எழுபத்தி ஐந்து கோடி ஆட்டையா? மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை