உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

3 சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தாம்பரம் - நாகர்கோவில் உட்பட மூன்று சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்கு

றிப்பு:பயணியரின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டித்து இயக்கப்படுகிறதுl நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர விரைவு ரயில் ஜூன் 2ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும், தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் ஜூன் 3ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரையிலும் நீட்டித்து இயக்கப்படுகிறதுl திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 2ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 3ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படும்l சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 5ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதி வரையிலும், கொச்சுவேலி - சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 6ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளதுஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

veeramani
மே 26, 2024 12:56

தமிழ்நாட்டில் செட்டிநாடு காரைக்குடியில் வசித்துவருகின்ற ஒரு மய்ய ஆரசின் ஊழியனின் வேண்டுகோள் அனைத்து சிறப்பு ரயில்களும் நாகர்கோயில், திருநெல்வேலி, திருவனந்தபுரம் பகுதியில் கொடுக்கிறீர்கள். நாங்களும் திருச்சி- ரமேஸ்வரம் லைனில் வசிக்கும் இந்தியர்கள்தான். எங்களது ஏரியாவில் இன்னும் இரண்டு வண்டிகள்தான் சென்னைக்கு செல்கின்றன. பல்லவன் காலை நேர அதிவிரைவு ரயிலாக செல்கிறது. ஆயினும் எப்பொழுதும் வெயிட்டிங் லிஸ்ட் தான். பாரத பிரதமர் திரு மோடி ஜி அவர்கள் காசியில் தேர்ந்து எடுக்கப்படவுள்ளார். ராமேஸ்வரம் இந்துக்களின் புண்ணியபூமி. தென்னக ரயில்வே காசி போல் நினைத்து இன்னு அதிக ரயில்கள் முக்கியமாக பகல் நேரத்து ரயில்கள் விடலாம். காரைக்குடி ஸ்டேஷன், மதுரை கோட்டத்தில் இருப்பதால் எங்களை சரிவர கவனிப்பதில்லை. மேலும் இரண்டாவது சிட்டிசன் ஆகா நடத்தப்படுகிறோம். தென்னக ரயில்வே நல்ல முடிவு எடுக்கும் என விரும்புகிறேன்


sangarapandi
மே 26, 2024 10:07

கோவை மதுரை இடையே தினசரி ரயிலை பொள்ளாச்சி பழனி வழியாக குறைந்த பட்சம் பகலில் நான்கு மணி நேர இடைவெளியில் தொடர்ந்து இயக்க வேண்டுகிறேன்


Saai Sundharamurthy AVK
மே 26, 2024 08:57

தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலில் கூட்டம் முழுவதுமாக நிரம்பி விடுகிறது. டிக்கெட் கிடைக்காமல் இரவில் ரயில் பயணம் மேற்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த காலை விரைவு ரயில் பயனுள்ளதாக அமைந்து விடுகிறது. ஆகவே, ரொம்பவும் பிஸியான இந்த வழியில் இதை தினசரி விரைவு ரயிலாக இயக்க வேண்டும்.


R Hariharan
மே 26, 2024 08:40

மேட்டுப்பாளையம் திருநெல்வேலி தினசரி வேண்டும் அல்லது வரவும் மூன்று முறை நீடித்திக்க வேண்டும்.


Muguntharajan
மே 26, 2024 07:33

மேட்டுப்பாளையம் திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். இதை உங்கள் நாளிதழில் செய்தியாக வெளியிட வேண்டும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை