உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் 350 தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல்: விசாரணை தீவிரம்

சென்னையில் 350 தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல்: விசாரணை தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை அரும்பாக்கம் ஆர்.கே.பார்மா நிறுவனத்தில், 350 தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை அரும்பாக்கம் ஆர்.கே. பார்மா நிறுவனத்தில் தாய்ப்பால் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்வதை அறிந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 350 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 50 மி.லி. தாய்ப்பால் ரூ.900 முதல் ரூ.1239 வரை விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நிருபர்கள் சந்திப்பில், ‛‛தாய்ப்பாலை பதப்படுத்தி விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். தாய்ப்பால் விற்பனைக்கு எப்.எஸ்.எஸ்.ஐ., விதிமுறையின் படி அனுமதி பெறவில்லை. ரசாயனம் கலக்கப்பட்டு தாய்ப்பால் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. என்னென்ன ரசாயனம் கலக்கப்பட்டுள்ளது என கண்டறிய ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் எங்கெல்லாம் விற்பனைக்கு அனுப்பட்டுள்ளது'' என தெரிவித்தனர்.ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர், மாதவரத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது, அரும்பாக்கத்தில் தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kasimani Baskaran
ஜூன் 03, 2024 21:30

போதை வஸ்துக்களுக்குப்பதில் தாய்ப்பால் விற்பது பெரிய குற்றமில்லை. கலப்படம் செய்து விற்று இருந்தால் உள்ளே தூக்கி வசூல் மெசினுடன் வைக்கலாம்.


அருணாசலம்
ஜூன் 03, 2024 19:39

சட்டப்படி குற்றமாகும் என்றால் எப்படி வேறு ஒரு அமைப்பின் தரச்சான்று கிடைக்கும்? முதலில் இந்த படத்தில் இருக்கும் மூவரையும் விசாரணை செய்யவும். இவனுங்க தான் எல்லா வீடியோவிலும் இருக்கிறார்கள்.


M Ramachandran
ஜூன் 03, 2024 19:17

நடக்கும் அரசின் பல நடவடிக்கைகள் உணமை குற்ற வாளிகளுக்கும் அடைகாலமாகவும் சாதாரான மனிதனுக்கும் சிம்ம சொப்பணமாகவும் இருக்கு. மக்கலிய்ய ரவணைத்து செல்லவும் அரசக்கா இருக்க வேண்டும். இந்த அரசை ஒரு ஐசு புரூட்டு காமராஜு ஆட்சி என்று போதையில் உளறி கொண்டிருக்கு


Indian
ஜூன் 03, 2024 16:24

இதுபோன்ற குற்றங்களை தடுக்க அரசாங்கம் தேவைப்படுபவர்களும் கொடுப்பவர்களும் நேரடியாக தொடர்புகொள்ளும் வகையில் ஒரு அமைப்பினை உருவாக்கினால் நன்றாகஇருக்கும்.


Ramanujadasan
ஜூன் 03, 2024 15:38

போதை பொருள் கடத்தல், அரசு சாராய விற்பனை , வோட்டுக்கு துட்டு , இப்போது தாய்ப்பால் கடத்தல் . திராவிட மாடல் அரசு சூப்பரோ சூப்பர்


கண்ணா
ஜூன் 03, 2024 15:23

இதோட இந்த கதை முடியும். தொடர்ந்து என்ன நடந்தது என்பது பற்றி வெளிவராது.


குமரி குருவி
ஜூன் 03, 2024 14:17

காலம் கலிகாலமாகி போச்சுங்க


G. P. Rajagopalan Raju
ஜூன் 03, 2024 14:02

அம்மாவையே விற்பனை செய்வார்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை