மேலும் செய்திகள்
வாக்காளர் கணக்கெடுப்பு பணி நேற்றுடன் நிறைவு
56 minutes ago
4 இடங்களில் காட்டுத்தீ; வனத்துறை தகவல்
1 hour(s) ago
தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சம் வழக்குகளுக்கு தீர்வு
1 hour(s) ago
சென்னை: 'எந்தெந்த பகுதி டிரான்ஸ்பார்மர்களில் கூடுதல் மின் பளு உள்ளது என்பதைக் கண்டறிந்து, அவற்றின் தரம் உயர்த்தப்பட வேண்டும்' என, மின்வாரிய பொறியாளர்களை, அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவுறுத்திஉள்ளார்.சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு, வாரிய உயரதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதில், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், தங்கம் தென்னரசு பேசியதாவது:பொதுமக்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்க, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். கூடுதல் மின்பளு மற்றும் குறைந்த மின்னழுத்தம் கண்டறியப்பட்ட, 4,194 டிரான்ஸ்பார்மருக்கு பதிலாக, இதுவரை தரம் உயர்த்தப்பட்ட, 2,550 டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டு, சீரான மின்சாரம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள, 1,644 டிரான்ஸ்பார்மர்களையும், அதிக திறனில் நிறுவும் பணி நடக்கிறது.பழுதடைந்த கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை மாற்றுவதுடன், சேதமடைந்த, 'பில்லர் பாக்ஸ்'களை சரி செய்ய வேண்டும். எந்தெந்த பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்களில் கூடுதல் மின்பளு ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, டிரான்ஸ்பார்மர்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும். புது டிரான்ஸ்பார்மர் நிறுவும் பணியை உடனே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.மின் வினியோக டிரான்ஸ்பார்மர், 11,000 'வோல்டில்' வரும் மின்சாரத்தை, 440 வோல்டாக குறைத்து, சீராக அனுப்புகிறது. ஒவ்வொரு இடத்திலும், 16 கே.வி.ஏ., எனப்படும், 'கிலோ வோல்ட் ஆம்பியர்' திறன், 25, 63, 75, 100, 150, 200, 250, 500 கே.வி.ஏ., திறனில் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன.மின்னழுத்தம், கூடுதல் மின்பளு ஏற்படும் டிரான்ஸ்பார்மருக்கு பதில், அதிக திறனில் பொருத்தப்படுகின்றன. சென்னையில், 63 கே.வி.ஏ.,க்கு பதில், 100 கே.வி.ஏ; 100க்கு பதில், 250 கே.வி.ஏ., டிரான்ஸ்பார்மர்கள் பொருத்தப்பட்டுகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல இடங்களில், 25 கே.வி.ஏ.,க்கு பதில், 63 கே.வி.ஏ., டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல், பல இடங்களில் மாற்றப்படுகின்றன.
56 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago