மேலும் செய்திகள்
தி.மு.க., புள்ளி வாங்கிய சொத்துகள் பட்டியல் தயாரிக்கிறது அமலாக்க துறை
58 minutes ago | 3
இன்று முதல் 17 லட்சம் மகளிருக்கு ரூ.1,000
2 hour(s) ago | 1
எப்போதும் இல்லாத வகையில் வெள்ளி விலை உச்சம்
3 hour(s) ago
சென்னை:ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு, பேரிடர் நிவாரணம் போன்றவற்றை வாங்க ரேஷன் கார்டு அவசியம். ஆண்டுதோறும் சராசரியாக, ஒரு லட்சத்திற்கும் அதிகமான புது கார்டுகள் வழங்கப்படும். அதன்படி, 2022 - 23ல், 2.21 லட்சம் ரேஷன் கார்டுகளும்; அதற்கு முந்தைய ஆண்டில், 7.50 லட்சம் கார்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.தமிழக அரசு மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, 2023 செப்டம்பரில் துவக்கியது. இதற்காக, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விண்ணப்பம் வழங்கப்பட்டு, அரசு விதித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இதனால், பலரும் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தனர். அந்தாண்டு ஜூலை முதல் பயனாளிகளுக்கு புதிய கார்டு வழங்கப்படவில்லை. எனவே, 2023 - 24ல், 61,047 ரேஷன் கார்டுகள் தான் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம், புதிய கார்டு கேட்டு, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தனர்.
58 minutes ago | 3
2 hour(s) ago | 1
3 hour(s) ago