உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.1146 கோடியில் 6746 குடியிருப்புகள்

ரூ.1146 கோடியில் 6746 குடியிருப்புகள்

சென்னை:''நடப்பாண்டு 6,746 அடுக்கு மாடி குடியிருப்புகள், 1,146 கோடி ரூபாயில், மறு கட்டுமானம் மற்றும் புதிய திட்டப் பகுதிகளில் கட்டுமானம் மேற்கொள்ளப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.சட்டசபையில், 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:சென்னை மற்றும் இதர நகரங்களில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, அடுக்குமாடி குடியிருப்புகளில் சில, நீண்ட காலப் பயன்பாடு மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக சிதிலமடைந்துள்ளன. இந்த குடியிருப்புகளை முறையாக கணக்கெடுத்து, அவற்றை மறு கட்டுமானம் செய்ய, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மறு கட்டுமானத்திற்கு பிறகு, இக்குடியிருப்புகள், ஏற்கனவே பழைய குடியிருப்புகளில் வசித்த குடும்பங்களுக்கும், அதே பகுதியில் அருகில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கும் ஒதுக்கப்படும்.தமிழகம் முழுதும், 1.94 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றில் 28,643 குடியிருப்புகள் சிதிலமடைந்துள்ளன. இவை அனைத்தும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், மறு கட்டுமானம் செய்யப்படும்.முதற்கட்டமாக நடப்பாண்டு, சென்னை மாநகரில், கிழக்கு கல்லறை சாலை, கொடுங்கையூர், வ.உ.சி., நகர் திட்டப்பகுதிகள்; தஞ்சாவூரில் ஏ.வி.பதி நகர் திட்டப்பகுதி; திருச்சியில் கோட்டக்கொல்லை திட்டப்பகுதி ஆகியவற்றில், 6,746 அடுக்குமாடி குடியிருப்புகள், 1,146 கோடி ரூபாயில், மறு கட்டமானம் மற்றும் புதிய திட்டப் பகுதிகளில், கட்டுமானம் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, ஸ்டாலின் அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை