உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏர்போர்ட் கழிப்பறையில் ரூ.90 லட்சம் தங்கம்

ஏர்போர்ட் கழிப்பறையில் ரூ.90 லட்சம் தங்கம்

சென்னை:சென்னை விமான நிலைய கழிப்பறையில் குப்பை தொட்டிக்குள் மறைத்து வைத்திருந்த 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சென்னை விமான நிலையத்தில் வருகை பகுதியில் கழிப்பறையை ஊழியர்கள் சுத்தம் செய்த போது குப்பை தொட்டியில் பார்சல் கிடந்ததை பார்த்தனர். வெடிகுண்டு இருக்கலாம் என மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்புஅதிகாரிகள் சோதனை நடத்தினர்.வெடிகுண்டு இல்லை என தெரியவந்ததும், பார்சலை பிரித்துப் பார்த்தனர். அதனுள் நான்கு தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.அதை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 1 கிலோ, 250 கிராம் எடையுள்ள அதன் மதிப்பு 90 லட்சம் ரூபாய். கடத்தி வந்த ஆசாமி யார் என்று, 'சிசிடிவி கேமரா' காட்சிகள் வாயிலாக, ஆய்வு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை