உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வி.ஏ.ஓ.,வை தாக்கியவர் மீது வழக்குப் பதிவு

வி.ஏ.ஓ.,வை தாக்கியவர் மீது வழக்குப் பதிவு

மரக்காணம: கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிராம உதவியாளரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.கோட்டக்குப்பம் அருகே மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 45; இவருக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்ய, நில அளவை துறையில் அனுமதி பெற்றிருந்தார்.நேற்று இந்த நிலத்தை அளவீடு செய்வதாக வருவாய் துறையினர் கூறியிருந்தனர்.ஆனால், நில அளவையர் வராததால் இந்த பணி கைவிடப்பட்டது. இதனால், கோபமடைந்த சரவணன், கீழ்புத்துப்பட்டு வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த வி.ஏ.ஓ., சிராஜ், 38; என்பவரை தாக்கியுள்ளார். சிராஜ் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார், சரவணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
மே 31, 2024 07:24

அரசு வூழியர்கள் செய்யும் குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் பாதுகாப்பு வழங்குகிறார்கள் இந்த நாட்டில்.அதனால் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என இறுமாந்து இருக்கிறார்கள்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை