உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்கள் பிரச்னையை தீர்க்காத அரசு நிலைக்காது!

மக்கள் பிரச்னையை தீர்க்காத அரசு நிலைக்காது!

சட்டசபையில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து விவாதிக்க, பிற அலுவல்களை ஒத்திவைக்க வலியுறுத்தினோம். விதிமுறையின்படி அனுமதி கோரி, மக்களின் உயிர் பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதி கேட்டோம்; சபாநாயகர் மறுத்து விட்டார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் எண்ணிக்கை, 63 ஆக உயர்ந்துள்ளது. பலருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை விட முக்கியமான பிரச்னை என்ன உள்ளது? மக்கள் பிரச்னையை எழுப்ப அனுமதி மறுக்கின்றனர். வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றினர்.அரசு மக்களுக்கு நன்மை செய்யாததுடன், எதிர்க்கட்சிகளை ஒடுக்கப் பார்க்கிறது. மக்கள் பிரச்னையை விவாதிக்க முடியாது என்றால், சட்டசபைக்கு வந்து என்ன பயன்? சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து, அரசியல் பேசுவது வேதனை அளிக்கிறது.அ.தி.மு.க., அரசு இருந்தபோது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, பல்வேறு ஜாதி சங்கத் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் அ.தி.மு.க., அரசு, 2020 டிச., 20ல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசாணை வெளியிட்டது.அதற்கான பூர்வாங்க பணிகளும் துவக்கப்பட்டன. ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆறு மாதத்திற்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அரசுக்கு அறிக்கை அளிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டது.ஆட்சி மாற்றத்திற்கு பின், அந்த காலக்கெடுவை நீட்டிக்கவில்லை. தற்போது, மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி, தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் வன்னியர்கள் அதிகம். அவர்கள் ஓட்டுகளை பெற, ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என, தீர்மானம் கொண்டு வருகின்றனர். இடைத்தேர்தலுக்காக இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்தை சி.பி.ஐ., விசாரிக்க, ஆதாரங்களுடன் கவர்னரிடம் மனு அளித்துள்ளோம். சட்டசபையில் கேள்வி நேரத்தில் பேசக்கூடாது என்கின்றனர். எங்களை வெளியேற்றி விட்டு, முதல்வர் பேசுகிறார். அதை மட்டும் எப்படி அனுமதிக்கின்றனர்? ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி; எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்கின்றனர். எங்கள் குரல்வளையை அரசு நசுக்குகிறது. மக்கள் பிரச்னையை தீர்க்காத அரசு நிலைத்ததாக வரலாறு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை