உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இ.பி.எஸ் வாகனத்தை சோதனையிட்ட தே்ரதல் பறக்கும் படையினர்

இ.பி.எஸ் வாகனத்தை சோதனையிட்ட தே்ரதல் பறக்கும் படையினர்

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்க அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உதகை வந்திருந்தார்.மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது குன்னூர் அடுத்த காட்டேரி என்னும் இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் அவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிலை எடுத்தனர். தொடர்ந்து 15 நிமிடத்திற்கு மேல் சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினர் எதுவும் கிடைக்காத நிலையில் வாகனத்தை அனுப்பி வைத்தனர்.சம்பவம் நடைபெற்ற சமயத்தில் EPS வாகனத்தில் பொறுமையாக அமர்ந்திருந்தார். முன்னாள் முதலமைச்சர் வாகனதையே சோதனை செய்த பறக்கும் படையினரால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை