உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாவுக்கல் கழுத்தணி, மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள் கிடைத்தன

மாவுக்கல் கழுத்தணி, மீன் உருவம் பொறித்த பானை ஓடுகள் கிடைத்தன

சென்னை:தமிழக தொல்லியல் துறை சார்பில், தமிழகத்தில் எட்டு இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடக்கின்றன. இதில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில், நுாலில் கோர்த்து கழுத்தில் அணியும் வகையில், மாவுக்கல்லால் செய்யப்பட்ட கழுத்தணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. கூம்பு வடிவில் செய்யப்பட்டுள்ள இந்த மாவுக்கல் அணிகலன், பச்சை நிறத்தில் உள்ளது. இதன் தலைப் பகுதியில் அணிகலனுடன் கோர்க்கும் துளை உள்ளது. இதேபோல், சிவகங்கை மாவட்டம் கீழடியில், தற்போது 10ம் கட்ட அகழாய்வுப் பணி நடக்கிறது. இங்கு, மீன் உருவம் பொறிக்கப்பட்ட பகுதியாக உடைந்த நிலையில் உள்ள இரண்டு பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிவப்பு வண்ணம் பூசப்பட்ட, பளபளப்பான இந்த பானை ஓடுகளில், மிகவும் நேர்த்தியாக மீன் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த தொல்பொருட்களின் படங்களை, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தன், 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ