உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியில் அரசு வரலாற்றில் இல்லாத அவலம்

தி.மு.க., ஆட்சியில் அரசு வரலாற்றில் இல்லாத அவலம்

சென்னை: 'தமிழக அரசு வரலாற்றில் இல்லாத வகையில், கைத்தறித் துறை பணியாளர்கள் மனித உரிமை மீறல்களுக்கு ஆளாவதாக, கண்ணீர் மல்க, மாநில மனித உரிமை ஆணையத்தின் கதவை தட்டியிருக்கும் அவலம், தி.மு.க., ஆட்சியில் நிகழ்ந்துள்ளது. அரசு ஊழியர்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்திருப்பது, இதுவே முதல் முறை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில், 'தற்போதுள்ள மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள், தி.மு.க.,வால் நியமிக்கப்பட்டவர்கள். இவர்களிடம் கைத்தறித் துறை பணியாளர்களுக்கு நியாயம் கிடைக்கும் எனத் தோன்றவில்லை.தி.மு.க., அரசு, தேர்தல் சமயத்தில் அரசு ஊழியர்கள் தொடர்பாக அள்ளி வீசிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. எனவே, அரசு ஊழியர் சங்கங்களும், போக்குவரத்து ஊழியர் சங்கங்களும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.மேலும், அனைத்து துறைகளிலும் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. முதல்வர் தனிப்பிரிவிலேயே 25க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, அனைத்து அரசு ஊழியர் சங்கங்களையும் அழைத்து பேசி, அவர்களின் குறைகளை உடனடியாக களைய வேண்டும். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

M Ramachandran
ஜூன் 01, 2024 13:01

ஜூன் 5 ஆம் தேதி பழனிசாமியின் பதவி பிடுங்ப்படும். இனி கூவத்தூர் காட்சியை போல் ஊர்ந்து செல்லவும் முடியாது.


M Ramachandran
ஜூன் 01, 2024 12:56

பரிதாபம் ஜூன் 5 தேதி முதல் ஜீரோ


Ramesh Sargam
ஜூன் 01, 2024 12:33

ஜூன் 4, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சூரியன் உதிக்க வாய்ப்பில்லை. தாமரை மலரும். இத்துடன் வானிலை அறிக்கை முடிவுபெறுகிறது. ??? ஸ்டிக்கர் ஆட்சிக்கு சங்கு ஊதப்படும் நாள் ஜூன் 4.


MADHAVAN
ஜூன் 01, 2024 12:19

பழனிசாமிக்கு 00 தொகுதிகள் கிடைக்கும், இனி பழனிச்சாமி கட்சியைவிட்டு போவது உறுதி


Lion Drsekar
ஜூன் 01, 2024 10:16

17 சீட்டுக்கள் வரப்போகிறது என்று தெரிந்தபின்பு தற்போது திருவாய் மலர்ந்தருளுகிறார் . மக்களுக்காக உழைத்தால் , கருத்துக்களை கூறி செயல்படுத்தினால் யாராக இருந்தாலும் வரவேற்கலாம், வந்தே மாதரம்


rasaa
ஜூன் 01, 2024 09:54

ஒரு பெரும் எதிர்கட்சியின் அடங்கிய குரலோசை. பொங்கி எழவேண்டாமா?


UTHAMAN
ஜூன் 01, 2024 11:06

ஊழல் வழக்குகள் உள்ளனவே. சவுக்குசங்கர் ஒரு ரிகர்சல் தான். ரிகர்சல் வெற்றி. ஒருத்தனும் வாய திறக்கல.


duruvasar
ஜூன் 01, 2024 09:40

கருப்பு சூட்டு, கோட்டு போட்ட கருப்பு கண்ணாடி அணிந்த மாநில மனித உரிமை ஆணைய தலைவர் ஜீன் 23 , 2023 க்கு பிறகு ஊரை காலி செய்துகொண்டு ஓடிவிட்டார் போல் தெரிகிறது.


மணியன்
ஜூன் 01, 2024 09:28

நாடகம் இனி மக்களிடம் எடுபடாது.


ராமகிருஷ்ணன்
ஜூன் 01, 2024 09:25

ஆட்சியில் இருப்பவர்கள் லஞ்ச பேய்கள் அவர்களிடம் மனித தன்மையை எதிர் பார்ப்பது நமது தவறு 550 வாக்குறுதிகளை நம்பி ஓட்டு போட்டீங்க அனுபவிங்க.


Duruvesan
ஜூன் 01, 2024 08:40

பொள்ளாச்சி கேஸ் வெச்சி தான் தீயமுக ஆட்சியே புடிச்சது. நதியா கேஸ் ல எடப்பாடி silent. ரெண்டு திராவிட கட்சியும் vip ?. NIA அல்லது CBI அந்த கேஸ் எலெக்ஷன் முடிஞ்சதும் எடுக்குமாம். கருக்கா வினோத் போட்டு குடுத்து இருப்பாங்கோ


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை