உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடுதல் நிதி ஒதுக்கீடு

கூடுதல் நிதி ஒதுக்கீடு

 கருப்பை வாய் புற்று நோயை தடுக்க, 'ஹெச்.பி.வி.,' தடுப்பூசியை, 14 வயதுடைய அனைத்து சிறுமியருக்கும் வழங்க, 36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது புற்றுநோய், இதயம் உள்ளிட்ட பாதிப்புகளைக் கண்டறியும் வகையில், மகளிருக்கான நடமாடும் மருத்துவக் குழுக்களை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்த, 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது காஞ்சிபுரம் மாவட்டம், அரசு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 800 படுக்கைகளுடன் கூடிய தன்னாட்சி பெற்ற மையமாக செயல்பட, 120 கோடி ரூபாய் வழங்கப்படும்3,000 புதிய பஸ்கள் வரும் நிதியாண்டில், 1,031 கோடி ரூபாயில், 3,000 புதிய பஸ்கள் வாங்கப்படும்  சென்னைக்கு, 950; கோவைக்கு, 75; மதுரைக்கு, 100 என மொத்தம், 1,125 மின் பஸ்கள் வாங்கப்படும் தமிழகத்தில் நகரங்களை ஒட்டி வளர்ந்து வரும் பகுதிகளில், 2,000 புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்படும் மாநில போக்குவரத்துக் கழகங்களின், 700 டீசல் பஸ்கள், சி.என்.ஜி., எனப்படும் இயற்கை எரிவாயு வாயிலாக இயங்கும் வகையில், 70 கோடி ரூபாயில் மாற்றப்படும்  தமிழகத்தில் வரும் நிதி ஆண்டில், 500 கி.மீ., வனப்பகுதி சாலைகள், 200 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை