உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூன்று மாவட்ட எஸ்.பி.,களுடன் கடலுாரில் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை

மூன்று மாவட்ட எஸ்.பி.,களுடன் கடலுாரில் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை

கடலுார்: கடலுார், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு பிரச்னை தொடர்பாக, எஸ்.பி.,க்களுடன் ஏ.டி.ஜி.பி., ஆலோசனை நடத்தினார்.கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷாமிட்டல், எஸ்.பி.,க்கள் கடலுார் ராஜாராம், விழுப்புரம் தீபக் சிவாச், கள்ளக்குறிச்சி ரஜத் சதுர்வேதி மற்றும் மூன்று மாவட்ட கூடுதல் எஸ்.பி.,க்கள், அனைத்து டி.எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும், கள்ளச்சாராயம் விற்பனை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் ஆசிர்வாதம், பொதுமக்கள் புகார் மீது உடன் விசாரணை செய்து தீர்வு காணவும், கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கவும், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுருத்தினார். பின்னர், பழைய எஸ்.பி.,, அலுவலகம் முன் மரக்கன்றுகள் நட்டார். தொடர்ந்து ஆனைக்குப்பத்தில் புதிதாக கட்டப்படும் போலீஸ் குடியிருப்பு கட்டுமானப்பணியை பார்வையிட்டார். பின்னர், ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் வாகன தணிக்கை பணியை ஆய்வு செய்தார். முன்னதாக, ஆன்லைனில் 6 பேர் இழந்த 22 லட்சத்து 44 ஆயிரத்து 500 ரூபாயை சைபர் கிரைம் போலீசார் மீட்டதை, உரியவர்களிடம் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ