உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அட்வகேட் ஜெனரல் தாய் மறைவு

அட்வகேட் ஜெனரல் தாய் மறைவு

சென்னை:தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமனின் தாய் கல்பகம் ராமன், 91, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.கல்பகம் ராமனின் கணவர் வி.பி.ராமன். மூத்த வழக்கறிஞரான இவர், 1977 முதல் 1979 ஆண்டு வரை, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்தார்.கல்பகம் ராமனின் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின், உயர் நீதிமன்றநீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். கல்பகம் ராமனின் இறுதி சடங்குகள் இன்று காலை நடக்கின்றன.கல்பகம் ராமனுக்கு, நடிகர் மோகன் வி.ராமன், மூத்த வழக்கறிஞரும், அட்வகேட் ஜெனரலுமான பி.எஸ்.ராமன், மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ