உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுபான்மையினரை திருப்திப்படுத்த ஹிந்துக்களை விமர்சிக்கும் இண்டியா கூட்டணி: அண்ணாமலை சாடல்

சிறுபான்மையினரை திருப்திப்படுத்த ஹிந்துக்களை விமர்சிக்கும் இண்டியா கூட்டணி: அண்ணாமலை சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சிறுபான்மையினரை திருப்திப்படுத்த ஹிந்துக்களை இண்டியா கூட்டணியினர் விமர்சித்து வருகின்றனர்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.லோக்சபாவில் விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசுகையில், ''பிரதமர் மோடி ஒட்டுமொத்த ஹிந்து மதத்தின் பிரதிநிதி அல்ல. பா.ஜ.,வின் ஹிந்துக்கள் வன்முறையாளர்கள்; உண்மையான ஹிந்துக்கள் அல்ல'' எனப் பேசினார். இந்த வீடியோவை எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை பகிர்ந்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2oi4ozq8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி தனது உண்மை நிலையை அம்பலப்படுத்தி வருகிறது. கடந்த வாரம் செங்கோலை விமர்சித்த இண்டியா கூட்டணியினர், சிறுபான்மையினரை திருப்திப்படுத்த ஹிந்துக்களை விமர்சித்து வருகின்றனர். பார்லிமென்டில் ஹிந்துக்களை வன்முறையாளர்கள் என கூறியதற்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். இது போன்ற இழிவான கருத்துக்களால் இந்நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தொடர்ந்து அவமதிக்கப்பட்டுள்ளனர். இண்டியா கூட்டணியினரின் ஈகோவை அடக்க முடியவில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

pmsamy
ஜூலை 02, 2024 08:01

பாஜக சிறுபான்மை மக்களுக்கு எதிரான கட்சி என்று அண்ணாமலை சொல்கிறார்


Kasimani Baskaran
ஜூலை 02, 2024 05:16

பாராளுமன்றத்தில் பதாதைகளை வைத்து கலாட்டா செய்ய முடியாது.


Nanda
ஜூலை 01, 2024 23:09

முதல்ல உங்க பேரை மாத்துங்க


Amruta Putran
ஜூலை 01, 2024 22:10

Comedy Pappu is becoming Cruel Pappu


Vijay
ஜூலை 01, 2024 21:08

இண்டி கூட்டணி ஆட்சியை பிடித்து விட்டதா ?


Ramesh
ஜூலை 01, 2024 20:54

நாங்கள் சோற்றால் அடித்த பிண்டங்கள் மட்டும் அல்ல.சாராயத்தாலும், பிரியாணியினாலும், 200ரூபாயினாலும், சமச்சீர் கல்வியினாலும் அடித்த முண்டங்கள். எங்கள் சந்ததி எப்படி ஆனாலும் நாங்கள் திமுகவிற்கு தான் ஓட்டு போடுவோம்.


Ms Mahadevan Mahadevan
ஜூலை 01, 2024 20:50

பிஜேபி ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி பிரச்சாரம் செய்ய முடியுமா? அண்ணாமலை இதை செய்வாரா?


தமிழ்வேள்
ஜூலை 01, 2024 20:01

தேர்தல் நாட்களில் நடத்த இயலாத கலவரங்களை தற்போது தூண்டும் வகையில் வேலை செய்யும் ஜார்ஜ் சோரஸ் டூல் கிட் பப்பு ராகுல் கான்...


Narayanan Muthu
ஜூலை 01, 2024 20:00

இனி உங்களின் ஹிந்து எனும் முகமூடி எடுபடாது. நீங்கள் ஹிந்துக்களின் பிரதிநிதிகள் எனும் போர்வை கிழிக்கப்பட்டுள்ளது. ஹிந்துக்களின் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே வாய்ப்புகளை வழங்கி பெரும்பான்மை ஹிந்துக்களை வஞ்சிப்பதை மக்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். உங்கள் கதறல் காற்றில் கரைந்து போகும்.


sridhar
ஜூலை 01, 2024 20:54

அப்படியா, காசு வாங்கிண்டு வேற இடத்துக்கு போனபிறகும் எதுக்கு இப்படி நாடகம் போடுறே


நிக்கோல்தாம்சன்
ஜூலை 01, 2024 22:58

சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று ஒரு தமிழக தலைவர் வாக்காளர்களை எல்லி நகையாடியுள்ளார் , அது குறித்து உங்களின் கருத்து


sankaranarayanan
ஜூலை 01, 2024 19:58

பப்புவின் பேச்சிற்கு உச்ச நீதிமன்றமே தானாகவே முன் வந்து அவரை மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் வாய்க்கு வந்தபடி பப்பு பேசினால் விளைவுகளை பப்பு சந்திக்க நேரிடும்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ