உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சசிகலாவை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா?: சீமான் கேள்வி

சசிகலாவை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா?: சீமான் கேள்வி

தேனி: சசிகலாவை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? என டிடிவி தினகரனுக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சீமான் வேட்பாளர் மருத்துவர் மதன் ஜெயபாலனுக்கு ஆதரவாக, தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:சசிகலாவை நான்கரை ஆண்டுகள் சிறையில் வைத்தவர்கள் யார்?. உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா?. சசிகலா பதவியேற்பதை தடுக்க 22 நாட்கள் தாமதப்படுத்தியது யார்?. சசிகலா வழக்கை அவசரமாக விசாரித்து தண்டனை வழங்கியது யார்?. பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு சசிகலா கூறியவுடன் அவசரமாக விசாரிக்க சொன்னது யார்?.

எனக்கு மிரட்டல்

சசிகலா குடும்பத்தில் நிகழ்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் பா.ஜ., தான். டிடிவி தினகரன், சசிகலா பிரச்னையில் இருந்த போது தமிழகத்தில் குரல் கொடுத்த ஒரே ஆள் நான். இரட்டை இலை சின்ன வழக்கில் கைதானவர் இன்னும் சிறையில் இருக்கிறார். என்னை மிரட்டி பார்த்தார்கள், நான் சமரசம் ஆகவில்லை, சரணடையவில்லை.

குக்கர் சின்னம் எப்படி?

விவசாயி சின்னத்தை முடக்கி விட்டார்கள் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் எனக் கூறுகிறார்கள். இப்பொழுது அமமுக.,வுக்கு குக்கர் சின்னம் எப்படி வந்தது. நீங்கள் முதலில் போய் கேட்டீர்களா?. நீங்கள் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தால் சின்னம் கிடைக்கிறது. எனது சின்னத்தை வேற ஒருவருக்கு கொடுத்துள்ளார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

RAAJ68
ஏப் 02, 2024 10:34

இலங்கையில் இரண்டரை லட்சம் தமிழ் மக்கள கொல்வதற்கு துணை போன காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைக்கவில்லையா அதையும் கேளுங்கள்


Suresh sridharan
ஏப் 02, 2024 08:12

அப்படியே இதையும் சேர்த்து சீ மான் அந்த வழக்கை போட்டது யார்? அதையும் சொல்லவும் பாதியை மட்டும் சொல்லக்கூடாது வழக்கிட்டது டிஎம்கே வழக்கு நடத்தியது டிஎம்கே இதயம் சொல்லவும் சீமான்


R Kay
ஏப் 01, 2024 22:18

எந்த விஷயத்தை குறித்தும் தீர்க்கமான புரிதல் இல்லாதவர் இவர் கமால்கானை போல சமயங்களில் உளறுபவர் குரலை உயர்த்தி பேசி எதோ போராளி போல மக்களை வசியம் செய்ய முயற்சிக்கிறார் அட்ட கத்தி வீரர்


vijai seshan
ஏப் 01, 2024 20:08

dabakur


Rathinakumar KN
ஏப் 01, 2024 20:07

ஆமைக்கறி தின்று வளர்ந்த உங்களுக்கு புத்தியும் அது போல் தான் வேலை செய்யும் ஜெ மற்றும் சசிகலா மீது வழக்கு தொடுத்தது உங்கள் தலைவர் கருணாநிதி தீர்ப்பு வழங்கியது நீதி மன்றங்கள் இதில் எங்கே பாஜக வந்தது


Rajagopal
ஏப் 01, 2024 20:07

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் சதவீதம் அதிகரிக்கும் திமுக/அதிமுக/காங்கிரஸ்/கம்யூனிஸ்ட்/மதிமுக/மநீம கூட்டணிகள் ஓட்டு சதவீதத்தில் நாம் தமிழர், பாஜக கட்சிகள் பெரும் குறைவை ஏற்படுத்தவுள்ளன


A1Suresh
ஏப் 01, 2024 19:29

இரும்படிக்கும் இடத்தில் இந்த ஈயை விட்டது யார் ? தமிழகத்தின் தலையெழுத்து இதெல்லாம் கூட தேர்தலில் நிற்கிறது


Kadavul
ஏப் 01, 2024 19:25

useless


Sudhakar Ramamoorthy
ஏப் 01, 2024 18:51

old page is very good compare with this no need to interest to read new design please change old page


Pandiarajan Thangaraj
ஏப் 01, 2024 18:50

சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை