உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பன்னீர்செல்வத்திற்கே தகுதி: சொல்கிறார் அமர் பிரசாத்

பன்னீர்செல்வத்திற்கே தகுதி: சொல்கிறார் அமர் பிரசாத்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி: ''அ.தி.மு.க., தலைவராகும் தகுதி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு மட்டுமே உண்டு என அக்கட்சி தொண்டர்களே கூறி வருகின்றனர்,'' என, பா.ஜ., விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி தெரிவித்தார்.

பல திட்டங்கள்

தேனியில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் குறித்து திட்ட அறிக்கை சரியாக வழங்காததால் திருப்பி அனுப்பப்பட்டது. இதற்கு மத்திய அரசை குற்றம் சொல்லக்கூடாது. தி.மு.க., அரசு ஊழல் நிறைந்தது. அமைச்சராக இருந்தவர் சிறையில் உள்ளார். பலரின் மீது வழக்கு உள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிடி ஆயோக் கூட்டத்தில் கூட முதல்வர் பங்கேற்கவில்லை. கேள்வி கேட்டால் 'குண்டாஸ்' என்ற நிலை உள்ளது. சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ., சார்பில் யாத்திரை நடத்த உள்ளோம். அதுகுறித்த அறிவிப்பை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிடுவார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு இருந்த மவுசு குறைந்து விட்டது. தமிழக மக்கள் பா.ஜ.,விற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கி உள்ளனர்.

மறு பெயர்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் ஸ்டாலினிடம் பேசியது அரசியல் நாகரிகம். துரோகத்தின் மறு பெயர் பழனிசாமி.அவர் யாருக்கும் உண்மையாக இருந்தது இல்லை. 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும். தி.மு.க.,வை எதிர்க்கும் சக்தி பா.ஜ.,விற்கு மட்டுமே உள்ளது.இவ்வாறு அமர்பிரசாத் ரெட்டி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Raja Vardhini
ஆக 20, 2024 10:20

பி.ஜே.பிக்கு சுப்ரமணியசுவாமி தான் சரியான தலைவர் என்று நான் சொன்னால் ஒத்துக்குவியா? அதிமுகவின் கட்சி விவகாரத்தில் தலையிட நீ யார்? போய் உன்னோட கூட்டாளி திமுகவுக்கு அறிவுரை சொல்லு...


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஆக 20, 2024 09:10

யாரா அது திடீர்னு புது பீசு.... நல்ல காமெடிதான்ப்பா.


பாமரன்
ஆக 20, 2024 06:35

இன்னிக்கு காமெடி நியூஸ் அந்த வெரி வெரி ஃபேமஸ் காடேஸ்வரா சொன்னது எதுவும் கிடையாதா??


Raman
ஆக 20, 2024 05:44

உனக்கு ஏன் இந்த வேண்டாத வேல


Venkatesh
ஆக 20, 2024 06:39

ஏண்டா செனைப்பன்னியும், தெர்மாகோல் விஞ்ஞானியும், மத்த மண்ணாந்தைகளும் பிஜேபி பத்தி பேசும் போது ஏத்தி விட்டு வேடிக்கை பாத்த நவழ்ந்தபாடியாருக்கு என்ன தகுதி இருக்கு.... தான் பெரிய முடி என்ற நினைப்புல ஆட்டம் ஆடி ஒன்னும் இல்லாம போகும்


Kasimani Baskaran
ஆக 20, 2024 05:21

ஒரு கட்சி நிலைத்து இருக்கவேண்டும் என்றால் தலைமைத்துவப் பண்புள்ளவர்களை ஊக்குவித்து பதவிகளில் அமர்த்த வேண்டும். பன்னீருக்கு தமிழகத்தின் தென்பகுதியில் அதிக செல்வாக்கு உண்டு. அதன் அடிப்படையில் அவரைத்தான் ஏ1 முன்னிறுத்தினார். ஆனால் எடப்பருக்கு அப்படி ஒரு சிறப்பு கிடையாது. ஒருசிலர் அவரை தலைவர் என்று ஏற்றுக்கொண்டாலும் அனைவரும் ஏற்றுக்கொள்வது இல்லை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை