உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏப்.04-ம் தேதி அமித்ஷா தமிழக நிகழ்ச்சிகள் ஒத்தி வைப்பு

ஏப்.04-ம் தேதி அமித்ஷா தமிழக நிகழ்ச்சிகள் ஒத்தி வைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி தமிழகத்தில் அமித்ஷாவின் 4-ம் தேதி வருகை நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.லோக்சபா தேர்தலையொட்டி பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் அமித்ஷா ஏப். 04-ம் தேதி தமிழகம் வருகை தர திட்டமிட்டிருந்தார்.தமிழகத்தில் தேனி தொகுதி வேட்பாளர் டி.டி.வி., தினகரனை ஆதரித்து ஏப். 04-ம் தேதி மாலையில் பிரசாரம் மற்றும் ரோட்ஷோ நடத்துவது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது இதற்காக மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது. அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டதால் மேடை பிரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இன்று வெளியான அறிவிப்பில் ஏப்04-ம் தேதி நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்ட தாகவும், பின்னர் தேதி அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sivak
ஏப் 03, 2024 23:32

அந்த பயம் இருக்கட்டும் ஆ ஆ போங்க ஊபி மைண்ட்வாய்ஸ் அப்பாடா நல்ல வேளை வரலை


Easwar Kamal
ஏப் 03, 2024 21:23

என்ன மாப்பு பேச கிடய்களையா? point


Sahadevan R
ஏப் 03, 2024 20:45

தமிழக வாக்காளர்கள் மிகவும் புத்திசாலிகள் இவரது செயல்பாடுகள் அனைத்தும் அறிந்தவர்கள் இவர் வருவதால் நிலைமை மேலும் மோசமாகி விடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை செய்ததால் ரத்து செய்து இருப்பார்


வாசகர்
ஏப் 03, 2024 20:44

ஐயா உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம். தமிழகம் காக்கப்பட வேண்டும்.


Naresh Kumar
ஏப் 03, 2024 20:37

கண்ணுல பயம் தெரியுதே


திகழ்ஓவியன்
ஏப் 03, 2024 19:11

இன்னும் இருக்கு உங்களூக்கு


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை